/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்துக்கு இடையூறு: 12 மாடுகள் பிடிப்பு
/
போக்குவரத்துக்கு இடையூறு: 12 மாடுகள் பிடிப்பு
ADDED : நவ 15, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரிந்த 12 மாடுகள் பிடிப்பட்டது.
கடலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராகவும் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
நேற்று செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த 12 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.