ADDED : நவ 26, 2024 07:13 AM
கடலுார்; கடலுார் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க துணை முதல்வர் உதயநிதி வருகையையொட்டி அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக மாவட்டம் முழுவதிலிமிருந்து கட்சியினர் ஏராளமானோர் கடலுாரில் குவிந்ததால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி நேற்று காலை 9:00 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதையொட்டி மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் கடலுாரில் குவிந்தனர்.
துணை முதல்வர் வருவதற்கு பகல் 12:00 மணியானதால் கட்சியினர் ஆங்காங்கே சாலையில் காத்திருந்தனர். அதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தில் தொ.மு.ச.,வை சேர்ந்த பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதால் பஸ் ஓட்ட ஆளில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பல கிராமப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டன.

