/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ட்ரெய்லர், லாரி கவிழ்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதம்
/
ட்ரெய்லர், லாரி கவிழ்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதம்
ட்ரெய்லர், லாரி கவிழ்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதம்
ட்ரெய்லர், லாரி கவிழ்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதம்
ADDED : ஜன 06, 2024 05:00 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் ட்ரெய்லர், லாரி அடுத்தடுத்த கவிழ்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதமானது.
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் கரும்பு லோடு டிராக்டர், லாரிகள் எய்தனுார் சாலை வழியாக ஆலைக்கு வரும்.
நேற்று காலை 8:00 மணியளவில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டரின் ட்ரெய்லர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் சாய்ந்து கவிழ்ந்தது. இதில், 2 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் அதே சாலையில் வந்த கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அடுத்தடுத்து 4 மின் கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இரு விபத்துகள் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாரி மற்றும் டிராக்டர்களில் அதிகளவு கரும்பு ஏற்றி வருவதாலும், தகுதி யில்லாத டிரைவர்கள் வாகனங்களை இயக்குவதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.
ஆலை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.