/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் விபத்து செய்திக்கான பாக்ஸ்...
/
ரயில் விபத்து செய்திக்கான பாக்ஸ்...
ADDED : ஜூலை 09, 2025 08:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீண்டும் சோகம்
கடலுார் அருகே நேற்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதியதில், கடலுார் அடுத்த எஸ்.குமராபுரம் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளி மாணவ, மாணவியர் 3 பேர் இறந்தார். டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கடலுார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலுாருக்கு தனியார் வேனில் வந்தபோது மருதாடு அருகே தனியார் பஸ் மோதியது. அந்த கோர விபத்தில் 7 மாணவ, மாணவியர் இறந்தனர். 19 ஆண்டுகளுக்குப்பின், மீண்டும் கொடூர விபத்தில் சிக்கி மாணவ, மாணவியர் 3 பேர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

