/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழிப்பிட வசதியின்றி ரயில் பயணிகள் அவதி
/
கழிப்பிட வசதியின்றி ரயில் பயணிகள் அவதி
ADDED : பிப் 23, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்துக்கு தினமும் நுாற்றுக்கணக்கில் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள கழிவறை பராமரிக்காததால் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அருகிலேயே நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கட்டி கொடுத்த கழிவறையும் வீணாகிவிட்டது. இதனால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, ரயில் பயணிகள் நலன் கருதி கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.