/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் ரயில் மறியல்: 30 பேர் கைது
/
பெண்ணாடத்தில் ரயில் மறியல்: 30 பேர் கைது
ADDED : நவ 13, 2024 07:05 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி, மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூ., கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி - சென்னை ரயில்வே மார்க்கத்தில் உள்ள பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
பாசஞ்சர் ரயில்களை தவிர்த்து கொல்லம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், புதுச்சேரி, அனந்தபுரி, பல்லவன், வைகை, ராக்போர்ட் மற்றும் வாராந்திர ரயில்களான ஹவுரா, நிஜாமுதீன் உள்ளிட்ட எந்த ரயில்களும் நின்று செல்வதில்லை.
அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரை அமைத்திட வேண்டும். கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் வகையில் லுாப்லைன் அமைக்க வேண்டும். மேலும், தாழநல்லுார் ரயில் நிலையத்தில் மதுரை - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் நேற்று ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் நேற்று காலை 9:25 மணியளவில் வந்தபோது, மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் மாதவன், வட்ட செயலாளர் அன்பழகன், கவுன்சிலர் விஸ்வநாதன், நகர செயலாளர்கள் அரவிந்தன், வரதன் உள்ளிட்டோர் மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 3 பெண்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

