/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிச., 21ல் ரயில் மறியல்: மா.கம்யூ., தீர்மானம்
/
டிச., 21ல் ரயில் மறியல்: மா.கம்யூ., தீர்மானம்
ADDED : நவ 28, 2024 06:55 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த மா.கம்யூ., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
பெண்ணாடத்தில் நடந்த வட்டக்குழு கூட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். வட்டக்குழு பன்னீர் வரவேற்றார். வட்டக்குழு உறுப்பினர் முத்துலட்சுமி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.
இதில், பெண்ணாடத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், மதுரை - விழுப்புரம் பாசஞ்சர் ரயிலை தாழநல்லுாரில் நிற்க நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச., 21ல் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.