/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் பயிற்சி முகாம்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் பயிற்சி முகாம்
ADDED : மார் 19, 2025 09:28 PM

சிதம்பரம்; எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில், மாணவர்கள் வேலைக்கு தயாராவது குறித்து ஊக்கமூட்டும் பயிற்சி முகாம் நடந்தது,
எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு சார்பில், 'உங்கள் கனவு வேலைக்கு உங்களைத் தயார் செய்வது எப்படி' எனும் தலைப்பில் ஊக்கமூட்டும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
முதல்வர் ஆனந்தவேலு முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத்தலைவர் ஹேமலதா வரவேற்றார்.
திருச்சி கேர் கல்வி நிறுவனக் குழு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பின் புல முதல்வர் செல்வகுமார் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் வேலைவாய்ப்பை பயன்படுத்தும் முறை, அதன் முக்கியத்துவம் குறித்தும், அதனால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பேசினார். 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.