ADDED : மார் 18, 2024 03:31 AM

சிறுபாக்கம், : சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி ஊராட்சியில் வேளாண் துறை சார்பில் மக்காச்சோளம் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் மோதிலால் தலைமை தாங்கினார். நுண்ணீர் பாசன துணை இயக்குனர் செல்வம், வேளாண் அலுவலர் கீர்த்தனா முன்னிலை வகித்தனர். வட்டார ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் தமிழ் ஆனந்த் வரவேற்றார். வேளாண் மாவட்ட இணை இயக்குனர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். உதவி வேளாண் அலுவலர் கணேஷ்பாலன், ஆத்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் முத்துசாமி, செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், சிறுதானிய பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது, மானாவாரி பயிர் சாகுபடியின் மானிய திட்டங்கள், பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்து இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

