/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி
/
விவசாய உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 18, 2024 03:36 AM
பண்ருட்டி :  அண்ணாகிராமத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் சார்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தியாளர் குழுவில் 30 உறுப்பினர்களுக்கு சமுதாய பண்ணைப் பள்ளி மூலம் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
இப்பயிற்சியில் மாடு பராமரிப்பு, காப்பீடு,  தீவன வகை உற்பத்தி, குறைந்த செலவில் அதிக பால் உற்பத்தி, பால் மதிப்பு கூட்டு பயிற்சி வழங்கினர்.
அண்ணா கிராமம் வட்டார அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் மணிகண்டன், பகண்டை கால்நடை மருத்துவர் அபர்ணா ஆகியோர் பயிற்றுனர்களுக்கு மருந்து பெட்டகம், சீருடை வழங்கினர்.
செயல் அலுவலர் சாமுண்டேஸ்வரி, வட்டார அணி தலைவர் பிரியா, மகளிர் திட்டம் வட்டார மேலாளர் பூபாலன், உற்பத்தியாளர் நிறுவன சி.இ.ஒ., தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

