ADDED : நவ 12, 2025 10:23 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், 'நான் முதல்வன் - வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், காளான் பண்ணை சிறுதொழில் முனைவோருக்கான வெளி வளாக பயிற்சி நடந்தது.
வேளாண் விஞ்ஞானி ஜெயக்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், பயனாளி மொலின் மற்றும் ஆரோக்கியமேரி ஆகியோர் புதிதாக வடிவமைத்துள்ள காளாண் வளர்ப்பு குடில், மண் புழு கூடம், கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு கொட்டகையினை பார்வையிட்டு வேளாண் விஞ்ஞானிகள் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினர்.
பண்ணை கழிவுகள் கொண்டு மண் புழு உரம் தயாரிப்பதற்கு சில்பாலின் பைகள் வழங்கப்பட்டது.
இதில், வேளாண் விஞ்ஞானிகள் கண்ணன், காயத்ரி, கலைச்செல்வி, வேளாண் அலுவலர்கள் மீனலட்சுமி, சாமூண்டீஸ்வரன், பவானி, விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த பயிற்சியில், தொழில்முனைவோர், மகளிர் உட்பட பலர் பங்கேற் றனர்.

