/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசாருக்கான பயிற்சி கடலுார் எஸ்.பி.,ஆய்வு
/
போலீசாருக்கான பயிற்சி கடலுார் எஸ்.பி.,ஆய்வு
ADDED : அக் 26, 2025 10:51 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் போலீசாருக்கான பெரேடு பயிற்சியினை எஸ்.பி., ஆய்வு செய்தார்.
சேத்தியாத்தோப்பு சந்திரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சோழத்தரம், ஒரத்துார், புத்துார், குமாராட்சி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கான வாராந்திர பெரேடு பயிற்சி வகுப்பு நடந்தது.
பெரேடு பயிற்சியினை ஆய்வு செய்த எஸ்.பி., ஜெயக்குமார், போலீசாருக்கு அறிவுரைகள், பின்பற்ற வேண்டிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து சேத்தியாத்தோப்பு சரகத்தில் தனிப்படை பிரிவு சிறப்பாக பணிபுரிந்து தலைமை மறைவு குற்றவாளியை பிடித்ததற்கு பாராட்டு தெரிவித்து சப்இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டுக்கள் விஜயகுமார், ரஜினிகாந்த் ஆகியோருக்கு சன்மானம் வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், வீரசேகரன், சிவப்பிரகாசம், தேவேந்திரன், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கிருஷ்ணராஜ், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்,

