/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
/
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 07, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; கீரப்பாளையம் அடுத்த சாக்காங்குடி அரசு பள்ளியில் சிறந்த மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் மணி வாசகன், கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பள்ளி மேலாண்மை குழு மாநில கருத்தாளர் அரவிந்த், மணிமொழி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் உமாதேவி, உதவி திட்ட அலுவலர் சிங்காரவேல் பேசினார்
ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகரன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மாலதி, கோபி, ஐசக் ஞானராஜ், சரிதா ஆகியோர் செய்திருந்தனர்.
ஒருங்கிணைப்பாளர் தசோதரன் நன்றி கூறினார் .