தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி


UPDATED : ஆக 19, 2026 11:08 PM

ADDED : ஆக 19, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 11:08 PM ADDED : ஆக 19, 2026 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி:பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கான திறன் வளர்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகுந்தன் தலைமை தாங்கினார். இதில் பி.டி.ஒ.,மீராகோமதி, குழந்தைகள் நல உறுப்பினர் துர்கா, சமூக பணியாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். பயிற்சியில் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினர்.

முகாமில், 50-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us