ADDED : நவ 23, 2026 03:15 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கார்மாங்குடி மீன் பண்ணையில் வேளாண் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின், வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் விருத்தாசலத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள், கார்மாங்குடி மீன் பண்ணையில் நேற்று (நவ.,22) பயிற்சி பெற்றனர்.
மீன் வளர்ப்பாளர் அண்ணாதுரை மீன்களின் வகைகள், வளர்ப்பு முறை, தீவன மேலாண்மை மற்றும் நோய்த்தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சியளித்தார். மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
