/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டுப்புழு வளர்ப்பு; மாணவர்களுக்கு பயிற்சி
/
பட்டுப்புழு வளர்ப்பு; மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 28, 2025 05:25 AM

விருத்தாசலம்; திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி, இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மாணவர்கள் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி பட்டுப்புழு வளர்க்கும் விவசாயி பூமாலையை சந்தித்தனர்.
அங்கு, பட்டுப்புழு வளர்ப்பது, பராமரிப்பு, பட்டுப்புழுவிற்கு உணவு உற்பத்தி செய்தல், பொருளாதார தேவைகள் மற்றும் பயன்கள், பட்டுப்புழு வளர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு தரும் மானியங்கள் குறித்து விவசாயி பூமாலை, மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.
மாணவர்கள் முகமது அனஸ், மகாதேவன், மனோஜ், முகுந்தன், ஹரிஷ் முத்து ராம், கண்ணன், குகன் ராஜ், கவுசிக், கிருபாகரன், கவுசிக் முகிலன், ஹிர்த்திக் முகுந்த் ஆகியோர் பங்கேற்றனர்.