ADDED : நவ 06, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி வட்டார ௬ குறு மையங்களை சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
புவனகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி, லட்சுமி முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள்சங்கு வரவேற்றார்.
சிறப்பு பயிற்சியை வடலுார் ஆசிரியர் பயிற்சி பேராசிரியர் நல்லமுத்து துவக்கி வைத்தார். மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஜெரினாபேகம், ஷர்மிலி, சுகந்தி, உமா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் ஆறு குறுவள மையங்களை சேர்ந்த பள்ளிகளில் பணியாற்றும் 82 ஆசிரியர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் நன்றி கூறினார்.