ADDED : பிப் 01, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழக அரசின் கல்வித்துறையின் கடலுார் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு ஸ்டீம் பயிற்சி முகாம் நடந்தது.
கடலுார் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கனகசபை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் மரியா வரவேற்றார்.
கண்காணிப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பிரபல அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பாகலந்து கொண்டு மாணவர்களிடம் உள்ள அறிவியல் புலமையை வெளிகொணரும் வகையில் பல்வேறு வழிமுறைகளை தொகுத்து பயிற்சி அளித்தார். தனியார் பள்ளிகளை சேர்ந்த 300 அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இளநிலை உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.