ADDED : ஆக 02, 2025 07:03 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி யில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்களை இளம் விஞ்ஞானி களாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அதிகாரி துரை பாண்டியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
மாநில செயலாளர் ஸ்டீபநாதன், பேராசிரியர்கள் கணேஷ், சார்லஸ், எடிசன், பாலகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். மாவட்ட இணை செயலாளர் பிரியா, மாவட்ட துணை தலைவர் சந்தியா, செயற்குழு உறுப்பினர் செல்வமணி, உஷா, ஜோதிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி ஒருங்கிணைத்தார். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.