ADDED : அக் 09, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில், புதிய எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தபயிற்சி முகாமில், மாநில முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இணை இயக்குனர் குமார் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, ராமதாஸ், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன் வரவேற்றார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் பூங்குழலி, காமாட்சி, மலர்கொடி ஆகியோர் எழுத்தறிவு திட்டங்கள் அதன் முக்கியத்துவம் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் 150 க்கு மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. எழுத்தறிவு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கதிரொளி நன்றி கூறி னார்..