/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:37 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.
அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால கிருஷ்ணன், நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன், பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தி, பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஓட்டுச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பயிற்சி, கட்சியின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.