/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை
/
கடலுார் அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை
ADDED : மார் 25, 2025 06:58 AM
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் பொருளியல் துறை சார்பில் மகளிர் அதிகாரம் அளித்தல் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். பொருளியல் துறைத் தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி வரவேற்றார். ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பொருளியல் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி கல்பனா சாவ்லா, விழாவை தொகுத்து வழங்கினார். மாணவி சந்தியா நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் உண்ணாமலை, குமார், லீலா, கோட்டைவீரன், செந்தில்குமார், சாந்தி, பிச்சபிள்ளை, ஹேமலதா, ரம்யா, பொன்னம்பலம், சுதாகர், கீதா, பத்மினி உட்பட பலர் பங்கேற்றனர்.