தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் தென்மாவட்ட பயணிகள் அவதி

ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் தென்மாவட்ட பயணிகள் அவதி

ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் தென்மாவட்ட பயணிகள் அவதி


ADDED : அக் 24, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கருங்குழி ரயில் நிலையத்தில் சிக்னல் அறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தென்மாவட்ட ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை – காரைக்குடி பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12605), வழக்கமாக மாலை 3:40 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு காரைக்குடி சென்றடையும். நேற்று வழக்கம்போல ரயில் புறப்பட்ட நிலையில், செங்கல்பட்டு – மேல்மருவத்துார் இடையே உள்ள கருங்குழி ரயில் நிலையத்தில் சிக்னல் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், சிக்னல் சாதனங்கள் எரிந்து சேதமடைந்ததால், சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டனர். இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு மாலை 6:05 மணிக்கு வர வேண்டிய ரயில், இரவு 8:45 மணிக்கு வந்தடைந்தது.

மேலும், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு மாலை 6:50 மணிக்கு பதிலாக, இரவு 9:20 மணிக்கு வந்து புறப்பட்டது. அதன்பின், அரியலுார், திருச்சி, புதுக்கோட்டை என இரண்டு மணி நேரம் தாமதமாக சென்று, நள்ளிரவு 12:35 மணிக்கு காரைக்குடி சென்றது.

சிக்னல் பழுது காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு, மேல்மருவத்துார் என ஆங்காங்கே எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைக்கப்பட்டன.

இதனால், பல்லவன் ரயிலுக்கு பின் வரவேண்டிய சம்பர் கிராந்தி எக்ஸ்பிரஸ், கொல்லம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், முத்துநகர், பொதிகை, அனந்தபுரி, சிலம்பு, நெல்லை, ராக்போர்ட், பாண்டியன் என தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் 2 மணி நேரம் தாமதமாக சென்றதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us