/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
27 தாசில்தார்கள் இடமாற்றம் கடலுார் மாவட்டத்தில் அதிரடி
/
27 தாசில்தார்கள் இடமாற்றம் கடலுார் மாவட்டத்தில் அதிரடி
27 தாசில்தார்கள் இடமாற்றம் கடலுார் மாவட்டத்தில் அதிரடி
27 தாசில்தார்கள் இடமாற்றம் கடலுார் மாவட்டத்தில் அதிரடி
ADDED : பிப் 02, 2024 03:58 AM
பரங்கிப்பேட்டை: கடலுார் மாவட்டத்தில் 27 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், அலுவலக மேலாளர் (குற்றவியல்) பலராமன், கடலுார் தாசில்தாராகவும், நெய்வேலி தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) ஆனந்த், பண்ருட்டி தாசில்தாராகவும், கடலுார் தனி தாசில்தார் (குடிமை பொருள்) அசோகன், குறிஞ்சிப்பாடி தாசில்தாராகவும், நெய்வேலி நில எடுப்பு தனி தாசில்தார் ஹேமா ஆனந்தி, சிதம்பரம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவக்குமார், காட்டுமன்னார்கோவில் தாசில்தாராகவும், விருத்தாசலம் தனி தாசில்தார் சேகர், ஸ்ரீ முஷ்ணம் தாசில்தாரா கவும், பண்ருட்டி தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) உதயகுமார், விருத்தாசலம் தாசில்தாராகவும், விருத்தாசலம் அந்தோணிராஜ், திட்டக்குடிக்கும், சிதம்பரம் தனி தாசில்தார் தனபதி, புவனகிரி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடலுார் விஜய் ஆனந்த், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக தனி தாசில்தார் செம்மனசெல்வி, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது), குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுரேஷ்குமார், நெய்வேலி நிலம் எடுப்பு தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் தனி தாசில்தாராகவும், திட்டக்குடி ஜெயந்தி, திட்டக்குடி தனி தாசில்தாராகவும், ஸ்ரீமுஷ்ணம் வெற்றிவேல், விருத்தாசலம் தனி தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக மேலாளர் ஜான்சிராணி, கலால் மேற்பார்வை அலுவலராக வும், கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) ஜெயக்குமார், கடலுார் தனி தாசில்தாராகவும், கலால் மேற்பார்வை அலுவலர் சுதா, சிதம்பரம் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் தனி தாசில் தார் உலகளந்தான், கட லுார் கோட்ட கலால் அலுவலராகவும், அங்கிருந்த மகேஷ், கடலுார் டாஸ்மாக் மேலாளராகவும், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், கலெக்டர் அலுவலகம் தனி தாசில்தார் (தேர்தல்), கலெக்டர் அலுவலகம் தனி தாசில்தர் ஹரிதாஸ் (தேர்தல்), கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும் (பேரிடர் மேலாண்மை). சிதம்பரம் தாசில்தார் செல்வகுமார், சிதம்பரம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு), சிதம்பரம் தனி தாசில்தார் புகழேந்தி (நிலம் எடுப்பு), சிதம்பரம் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், திட்டக்குடி தனி தாசில்தார் கார்த்திக், பண்ருட்டி தனி தாசில்தார் (நிலம் எடுப்பு), கடலுார் சிப்காட் டாஸ்மாக் மேலாளர் சரஸ்வதி, நெய்வேலி தனி தாசில்தார் (நிலம் எடுப்பு), புவனகிரி தாசில்தார் தமிழ்ச்செல்வி, சிதம்பரம் தனி தாசில்தாராகவும், சிதம்பரம் தாசில்தார் ஹேமா ஆனந்தி, சிதம்பரம் தனி தாசில்தாராக (சமுக பாதுகாப்பு திட்டம்) கூடுதல் பொறுப்பாகவும் என, மாவட்டத்தில் 27 தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

