ADDED : அக் 29, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சிக்குட்பட்ட வல்லம் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் இருந்ததால், மின்துறை சார்பில், ரூ. 3.40 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதனை, ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ் தலைமை தாங்கி, இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர் சரண்யா, ஊழியர்கள் சுப்ரமணியன், வெண்மதி, துரை, செல்வம், வேல்முருகன், சக்திவேல் மற்றும் ஊராட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

