ADDED : அக் 25, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் நகரம் பீடரில் பெ.கொல்லத்தங்குறிச்சி சாலை பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதிகளில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், 4 லட்சத்து 89 ஆயிரத்து 695 ரூபாய் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
பெண்ணாடம் துணைமின் நிலைய உதவி பொறியாளர் வெங்கடேசன், மின்வாரிய பணியாளர்கள் உடனிருந்தனர்.

