/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தை கடத்த வந்ததாக திருநங்கை மீது தாக்கு; விருத்தாசலத்தில் பரபரப்பு

ADDED : மார் 11, 2024 05:56 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் பகுதியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, திருநங்கையை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. .
விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவம் நடந்து வருவதாக வதந்தி பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் காணாதுகண்டான் பகுதியில் சிறுவனை கடத்த முயற்சி, வயலுார் மேம்பாலத்தில் குழந்தைகளை வாலிபர் போட்டோ எடுத்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு பூதாமூர் பகுதியில் திருநங்கை ஒருவர் நைட்டியுடன் அப்பகுதியில் நடமாடி உள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், குழந்தைகளை கடத்துவதற்காக வாலிபர் யாரோ பெண் வேடமிட்டு வந்துள்ளதாக நினைத்து திருநங்கையை தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார், திருநங்கையை மீட்டு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.