/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 23, 2025 04:03 AM
கடலுார்: அரசு போக்குவரத்து துறையில் அமைச்சு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, தமிழக போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
போக்குவரத்து துறையில் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்களில் அமைச்சு பணி பிரிவினர்களுக்கு தனியான ஒதுக்கீடு உண்டு.
அந்த ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு இரண்டு பணியிடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒதுக்கீடு வழங்கவில்லை.தொழில்நுட்ப பணியாளர்களின் சலுகைகளையும், உரிமைகளையும் உடனுக்குடன் வழங்கக்கூடிய போக்குவரத்து துறை அமைச்சு பணி பிரிவினர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் 30ம் தேதி போக்குவரத்து துறை பணியாளர்களை திரட்டி சென்னையில் உள்ள போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.