/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஸ்டம்ஸ் சாலையில் பயணிப்பது கஷ்டம்தான்! அரைகுறை பணியால் மக்கள் அவதி
/
கஸ்டம்ஸ் சாலையில் பயணிப்பது கஷ்டம்தான்! அரைகுறை பணியால் மக்கள் அவதி
கஸ்டம்ஸ் சாலையில் பயணிப்பது கஷ்டம்தான்! அரைகுறை பணியால் மக்கள் அவதி
கஸ்டம்ஸ் சாலையில் பயணிப்பது கஷ்டம்தான்! அரைகுறை பணியால் மக்கள் அவதி
ADDED : நவ 24, 2024 11:28 PM
கடலுார்; கடலுார் பெண்ணையாற்று கரையோரம் போடப்பட்டுள்ள (கடலுார்-கண்டரக்கோட்டை) பழைய கஸ்டம்ஸ் சாலை, 2ம் கட்டப் பணி இதுவரை துவங்க அரசு முயற்சி மேற்கொள்ளாததால் மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் உட்பட பல்வேறு கடத்தலை தடுப்பதற்காக, பெண்ணையாற்றின் தென் கரையோரம் அமைக்கப்பட்டது தான் கஸ்டம்ஸ் சாலை. இந்த சாலை காலப்போக்கில் ஆக்கிரமிப்பில் சிக்கி சின்னாபின்னமானது.
கடந்த ஆட்சியில் இந்த கஸ்டம்ஸ் சாலை அந்தந்த ஊராட்சி நிதியில், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போடப்பட்டது.
கடலுாரில் இருந்து பட்டாம்பாக்கம் வரை முதல்கட்ட பணி துவங்கியது. கடலுாரில் இருந்து விழுப்புரம் செல்வதற்கு கஸ்டம்ஸ் சாலை அமைக்கப்பட்டால் மிக விரைவாகவும், 10 கி.மீ., தொலைவு குறைவாகவும் செல்ல முடியும்.
இந்த சாலை வழியில் உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சி, பட்டாம்பாக்கம் பேரூராட்சி ஆகிய இடங்களுக்கு செல்லாமல் விழுப்புரம் பயணிக்கலாம்.
அதில் முதல்கட்டமாக கடலுாரில் இருந்து பட்டாம்பாக்கம் வரை 16 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது கடலுாரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வரை சொர்ணாவூர் சாலையில் இணைத்து பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டன.
இரண்டாம் கட்டமாக பட்டாம்பாக்கம் முதல் கண்டரக்கோட்டை வரையிலான சாலை அமைக்க அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்த சாலையில் 60 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது.
அதையொட்டி கடந்த காலத்தில் கலெக்டர் தம்புராஜ் 3 முறை அதிகாரிகளோடு கூட்டு கூட்டம் நடத்தினார். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சாலை போடுவதற்காக நிலம் தர தயாராக உள்ளனர்.
இருப்பினும் ஆட்சியில் உள்ள கலெக்டர் இப்பணியை செய்து முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் மக்கள் மாற்று வழியில் பயணம் செய்தால் கடலுார் - பண்ருட்டி சாலையில் போக்குவரத்து கனிசமாக குறையும்.
எனவே துணை முதல்வர் தலையிட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைவர்.