/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் மீது மரம் விழுந்தது; உயிர் தப்பிய தம்பதி
/
வீட்டின் மீது மரம் விழுந்தது; உயிர் தப்பிய தம்பதி
ADDED : டிச 16, 2024 07:07 AM

காட்டுமன்னார்கோவில்; கண்டமங்கலத்தில் வீட்டின் கூரை மீது புளியம் மரம் விழுந்து, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் கன மழையால் கண்டமங்கலம், குருங்குடி பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதியடைந்தனர்.
கண்டமங்கலம், குமிளங்காட்டு தெருவில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 60, என்பவரது கூரை வீட்டின் அருகில் இருந்த பெரிய புளியம் மரத்தின் கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனைவி இருவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். புளியம் மரம் விழுந்ததால் வீட்டின் மேல் கூரை சேதம் அடைந்தது. கணவன், மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.