/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மரங்கள் வெட்டி அகற்றம்: செராமிக் வளாகத்தில் பரபரப்பு
/
மரங்கள் வெட்டி அகற்றம்: செராமிக் வளாகத்தில் பரபரப்பு
மரங்கள் வெட்டி அகற்றம்: செராமிக் வளாகத்தில் பரபரப்பு
மரங்கள் வெட்டி அகற்றம்: செராமிக் வளாகத்தில் பரபரப்பு
ADDED : ஜன 09, 2025 12:38 AM

விருத்தாசலம், ; விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் செராமிக் கற்குழாய் தொழிற்சாலை, செராமிக் தொழிற்பேட்டை, பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரி உருவாக்கப்பட்டன. இங்கு அகல் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு கலைப்பொருட்கள், மின்சாதன உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தொழிற்கூடங்களை சுற்றி நுாற்றாண்டுகள் பழமையான ஆலம், அரசு உட்பட வேம்பு, புங்கன், அத்தி, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிற்கின்றன. இவற்றை தனிநபர் கடந்த 5ம் தேதி, அடியோடு வெட்டி அகற்றியுள்ளார்.
இது தொடர்பாக சிட்கோ நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் முருகன் உள்ளிட்டோர் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

