/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கோர்ட்டில் மரக்கன்று நடும் விழா
/
கடலுார் கோர்ட்டில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 29, 2025 07:39 AM

கடலுார் : கடலுார் மாவட்ட கோர்ட் வளாகத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்த மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமையில் வேம்பு, இலுப்பை, மகாகனி, நாவல் உட்பட 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரமேஷ் செய்திருந்தார்.
குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஷோபனாதேவி, மோட்டார் வாகன விபத்து வழக்கு களின் இரண்டாவது மாவட்ட நீதிபதி பிரகாஷ், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி பத்மாவதி, நில எடுப்பு வழக்குகளின் சிறப்பு சார்பு நீதிபதி லலிதா ராணி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சார்பு நீதிபதி நிஷா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜா குமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவர்ஷா, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஸ்ரீநிதி, புவனேஷ் குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் ராம்சிங், செயலாளர் யுவராஜா, வழக்கறிஞர் அருளப்பன், மாவட்ட வன அலுவலக ரேஞ்சர் கேசவன் பங்கேற்றனர்.