/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
/
சாலை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
ADDED : நவ 27, 2025 04:47 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே சாலை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள திருச்சின்னபுரம் ஊராட்சிக்குட்பட்ட, மெயின் ரோட்டை தெரு, வடக்கு தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளுக்கு சாலை போடப்பட்டு, தற்போது அனைத்து சாலைகளும் படுமோசமாக நிலையில் உள்ளது. இதனால் கிராமத்து மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இ.கம்யூ., கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், நேற்று நாற்று நடும் போராட்டம் நடந்தது. இதையொட்டி, சேறும் சகதியுமான உள்ள சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கிளை செயலாளர் நிதீஷ்குமார் தலைமை தாங்கினார் ஆழ்வார், மாதவன், மோகன், செல்வராசன், நடராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேகர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர், வட்ட செயலாளர் முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

