/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழங்குடியினர் முகாம் பிசுபிசுப்பு
/
பழங்குடியினர் முகாம் பிசுபிசுப்பு
ADDED : மே 04, 2025 04:53 AM

நடுவீரப்பட்டு : பாலுாரில் பழங்குடி மக்களுக்காக நடத்தப்பட்ட முகாமில், ௪ பேர் மட்டுமே மனு கொடுத்தனர்.
பண்ருட்டி அடுத்த பாலுாரில் வருவாய்த்துறை சார்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தாசில்தார் பிரகாஷ் மனுக்களை பெற்றனர். வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, வி.ஏ.ஓ.,க்கள் வீரமணி, கயல்விழி, அய்யனார், கவுசல்யா உடனிருந்தனர்.
காலை முதல் மாலை வரை நடந்த முகாமில் 4 பேர் மட்டுமே மனு அளித்தனர். மனு அளிக்கக் கூட நாட்டம் இல்லாத நிலையில், முகாம் பிசுபிசுத்துப் போனது.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அருகில் உள்ள பல்லவராயநத்தம் கிராமத்தில் முகாம் நடத்தியிருந்தால் பலனடைந்திருப்பார்கள்.
பழங்குடியினர் அதிகம் வசிக்காத ஊரில் முகாம் என்பது கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது போல் உள்ளது என, பழங்குடியினர் மக்கள் தெரிவித்தனர்.