ADDED : ஏப் 26, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்.,சார்பில் கடலுாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலுார் மாநகர தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சாந்தி, ராஜ்குமார், மாவட்ட மீனவரணி தலைவர் கார்த்திகேயன், ஓ.பி.சி.,அணி மாவட்ட தலைவர் ராமராஜ், மாநகர செயலாளர்கள் சங்கர், ராமஜெயம், செந்தில், ரகுபதி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வேலு உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.