ADDED : டிச 31, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் மற்றும் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு இயற்கை விவசாயி கோட்டேரி சிவக்குமார் தலைமை தாங்கினார்.
நம்மாழ்வாரின் மரபுவழி விதைகள் சேகரிப்பு மற்றும் இயற்கை வேளாண்மைக்கு அவரது பணிகள் குறித்து முருகன்குடி முருகன் பேசினார்.
தமிழக உழவர் முன்னணி மாநில பொருளாளர் கனகசபை, இயற்கை விவசாயிகள் கவியரசன், கோவிந்தராஜ், சிலம்புச் செல்வி உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன் னோடி விவசாயிகள் பங்கேற்றனர். அதில், மரபு வழி நெல் விதைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்களின் கண்காட்சி இடம் பெற்றிருந்தன.