/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணத்தில் மூவர்ண கொடி பேரணி
/
ஸ்ரீமுஷ்ணத்தில் மூவர்ண கொடி பேரணி
ADDED : மே 21, 2025 02:46 AM

ஸ்ரீமுஷ்ணம் : பாகிஸ்தானுக்கு எதிரான சிந்துார் போரில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஸ்ரீமுஷ்ணத்தில் மூவர்ண கொடி பேரணி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கல்வி நிறுவனங்கள், ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி கிளப், ஜே.சி.ஐ., மற்றும் எஸ்.பி.ஜி., வித்யாலயா பள்ளி, நகர வர்த்தக நலச்சங்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியன சார்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
ரோட்டரி கிளப் சாசன தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் குருராஜன் வரவேற்றார்.
சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, ரோட்டரி கிளப் துணை ஆளுநர் அசோக் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
பேரணி அண்ணாதுரை சிலை அருகில் துவங்கி புதிய பஸ் ஸ்டாண்டு வரை நடந்தது.
ரோட்டரி பொருளாளர் ரவிச்சந்திரன், ஜே.சி.ஐ., தலைவர் சிவராமன், முன்னாள் தலைவர்கள் வேல்முருகன், மனோகர், நகர வர்த்தக நலச்சங்க தலைவர் சிவானந்தம், மாவட்ட இளைஞரணி பூவராகமூர்த்தி, எஸ்.பி.ஜி. வித்யாலயா பள்ளி முதல்வர் பினேஷ்ஜான், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சிற்றரசன் மற்றும் வர்த்தக நல சங்க பிரமுகர்கள், ஜெ.பி., பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர்.