ADDED : நவ 18, 2024 07:52 PM
சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் அறிவியல் புலம், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம், மத்திய சுற்றுச்சூழல், சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்ட மையம் சார்பில் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
முடசல் ஓடை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மெஹருன்னிசா வரவேற்றார். கடல் அறிவியல் புலம் புல முதல்வர் சவுந்திரபாண்டியன் சுனாமி விழிப்புணர்வு பிரசுரத்தை வெளியிட்டு பேசினார். திட்ட அலுவலர் லெனின், விளக்க காட்சி மூலம் சுனாமி பேரழிவுகளின் போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறினார். 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் தகவல் மைய ஊழியர்கள் விஜயலட்சுமி, செந்தில்குமார், சுப்பிரமணியன், நாகராஜன், சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.