/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காசநோய் பரிசோதனை எக்ஸ்ரே வேன் துவக்க விழா
/
காசநோய் பரிசோதனை எக்ஸ்ரே வேன் துவக்க விழா
ADDED : டிச 08, 2024 05:28 AM

கடலுார் : கடலுார் மாவட்ட காசநோய் தடுப்பு மையத்தின் சார்பில் சிறப்பு காசநோய் பரிசோதனை எக்ஸ்ரே வேன் துவக்க விழா, கடலுார் டவுன்ஹால் எதிரில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு துணை இயக்குனர் (காசநோய்) கருணாகரன் வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி முன்னிலை வகித்தார். கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, பரிசோதனை எக்ஸ்ரே வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (தொழுநோய்) சித்திரைசெல்வி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், திட்ட மேலாளர் செல்வம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஆட்டோக்களில் காசநோய் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம், கடலுார் டவுன்ஹாலில் துவங்கி, மாநகராட்சி அலுவலகம் வழியாக அரசு தலைமை மருத்துவமனையில் முடிந்தது.
ஊர்வலத்தில், சம்பந்தமூர்த்தி தலைமையிலான கலைக்குழுவினர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.