/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பரங்கிப்பேட்டையில் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பரங்கிப்பேட்டையில் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பரங்கிப்பேட்டையில் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 28, 2024 05:38 AM

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில், ஆமை குஞ்சுகள், முட்டைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார்  வனக் கோட்டத்திற்குட்பட்ட பிச்சாவரம் வனச்சரகம் சார்பில், ரெட்லி வகை ஆமை குஞ்சுகள் பாதுகாப்பு மற்றும் ஆமை முட்டை பாதுகாப்பு குறித்து வனத்துறை சார்பில் பரங்கிப்பேட்டை கடல் அறிவியல் புலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மண்டல தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட வன அலுவலர் குருசாமி  முன்னிலை வகித்தார்.
பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால் வரவேற்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் புல முதல்வர் டாக்டர் கதிரேசன், புல முதல்வர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் ரெட்லி வகை ஆமை  குஞ்சுகளை பாதுகாப்பது குறித்தும் அவற்றை பராமரிப்பது குறித்து விளக்கி கூறினர்.
மேலும், இதுகுறித்து வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கிள்ளை பேரூராட்சி சேர்மன் மல்லிகா, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ், கடலுார் வன அலுவலர் பாரதிசாதன், கிள்ளை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நீதிமணி, கலைச்செல்வன், லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வனவர் அருள்தாஸ் நன்றி கூறினார்.

