/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது
/
2 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது
ADDED : ஏப் 05, 2025 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பில்லாலி தொட்டி, கெடிலம் ஆற்றங்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், பில்லாலி தொட்டியைச் சேர்ந்த மணி மகன் சூர்யா (எ) சுனாமி சூர்யா,27; நெல்லிக்குப்பம் அடுத்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் பரத்குமார்,23; என்பதும், கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

