/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பீர்பாட்டிலால் தாக்கிய இருவர் கைது
/
பீர்பாட்டிலால் தாக்கிய இருவர் கைது
ADDED : செப் 23, 2024 08:06 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கார்குடலை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராஜேஷ், 28. கடந்த 16ம் தேதி உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டு திருமணத்திற்காக புதுக்கூரைப்பேட்டைக்கு சென்றார்.
அங்கு, திருமண மண்டபத்தில் இருந்து இரவு 1:30 மணியளவில் புறவழிச்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு நின்றிருந்த பூந்தோட்டம் செல்வராஜ் மகன் தனசேகர், 36, ஹரி, சங்கர் மகன் ராஜ்குமார் ஆகியோர் குடிபோதையில், ராஜேைஷ வழிமறித்து திட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். அதில், படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்கு பதிந்து தனசேகர், ராஜ்குமாரை கைது செய்தார்.
தலைமறைவாக உள்ள ஹரி என்பவரை தேடி வருகிறார்.