/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயி மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
/
விவசாயி மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
ADDED : ஜன 18, 2025 02:03 AM
பெண்ணாடம்: விளையாட்டு போட்டி பரிசு வழங்கும்போது, கூச்சலிட்டதை கண்டித்தவரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இரவு 9:00 மணியளவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் அலெக்ஸ், 23, ஞானபிரகாசம் மகன் திவாகர், 23, கதிர்வேல் மகன் மணிகண்டன் ஆகியோர் கூச்சலிட்டனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியான தீபஜோதி, 44, கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ் உட்பட மூவரும் சேர்ந்து தீபஜோதியை திட்டித்தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
தீபஜோதி தாய் தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து அலெக்ஸ், திவாகர் இருவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.