ADDED : நவ 22, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் வடக்கிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ரஞ்சித்குமார், 25; இவர் கடந்த 19ம் தேதி இரவு அண்ணாமலை நகர் திருவக்குளம் சந்தையில் பழம் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அண்ணாமலை நகர் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த, தெய்வசிகாமணி மகன் முருகானந்தம், 33; அக்ரி மெயின் ரோட்டை சேர்ந்த கோபால், 46; இருவரும், முன் விரோதம் காரணமாக, ரஞ்சித்குமாரை தாக்கினர். ரஞ்சித்குமார் கொடுத்த புகாரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, முருகானந்தம், கோபால் இருவரையும் கைது செய்தனர்.