/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் பைக் திருட்டு இருவர் கைது
/
சிதம்பரத்தில் பைக் திருட்டு இருவர் கைது
ADDED : ஜூலை 18, 2025 01:26 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் பைக் திருடிய காரைக்கால் ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பைக் திருட்டு அவ்வப்போது நடந்து வந்தது.
இதுகுறித்த புகார்களின்பேரில், சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், காரைக்கால், மஸ்தான் பள்ளி வீதி ராஜ்குமார் மகன் சந்தோஷ், 25: காரைக்கால் காமராஜர் வீதி முருகன் மகன் விக்கி என்கிற விக்னேஷ்வரன், 28: ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், சிதம்பரத்தில் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
அதைடுத்து இருவரையும் கைது செய்த சிதம்பரம் நகர போலீசார், அவர்களிடமிருந்து இரு பைக்குகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.