ADDED : செப் 21, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கு ஏற்ப சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் மேல்புவனகிரி ஏ.எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த ரவி,44; மற்றும் புவனகிரி ஈஸ்வரன்கோவில்தெரு கனகராஜ்,37; என்பதும், கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இருவர் மீது வழக்குப் பதிந்து 15 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர்.