ADDED : அக் 11, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் ரோந்து சென்றனர். பெ.பொன்னேரி டாஸ்மாக் கடை அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, சோழன் நகர் ஸ்டாலின், 36, பெ.பொன்னேரி, திடீர்குப்பம் அலாவுதீன், 47, பெண்ணாடம் அரவிந்த், சோழன் நகர் தமிழ் வளவன், 27, ஆகியோரை பிடிக்க முயன்றனர்.
அலாவுதீன், தமிழ்வளவன் இருவரை கைது, அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஸ்டாலின், அரவிந்த் இருவரை தேடி வருகின்றனர்.