ADDED : மே 21, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முகுந்தநல்லுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கேசவன், 49, என்பவர் தனது பெட்டிக்கடையில், குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியை சேர்ந்த ரமேஷ், 45; என்பவரிடம் குட்கா பொருட்களை கொள்முதல் செய்வது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து கேசவன், ரமேைஷ கைது செய்தனர். மேலும், ரமேஷ் வீட்டில் சோதனை நடத்தி 34,000 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.