ADDED : நவ 05, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் இன்று (நவ.,5) ரோந்து சென்றனர். அப்போது பெரியாண்டிக்குழி ரயில்வே ஸ்டேஷன் அருகே, டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்த அய்யப்பன் மகன் பிரேம்குமார்,26; ராமச்சந்திரன் மகன் கந்தவேல்,27; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
