/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி அருகே குட்கா விற்பனை சிதம்பரத்தில் இருவர் கைது
/
பள்ளி அருகே குட்கா விற்பனை சிதம்பரத்தில் இருவர் கைது
பள்ளி அருகே குட்கா விற்பனை சிதம்பரத்தில் இருவர் கைது
பள்ளி அருகே குட்கா விற்பனை சிதம்பரத்தில் இருவர் கைது
ADDED : டிச 22, 2024 08:15 AM
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அண்ணாமலை நகர் அரசு பள்ளி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இரு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், அவர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சேகர் மகன் மகேந்திரராஜா, 34; ராஜஸ்தான் மாநிலம் ஜோலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹோம்புரி மகன் சரவணபுரி, 20; என தெரியவந்தது.
அவர்கள் பள்ளி மாணவர்களிடம் ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.